Monday, November 30, 2015

உலக காலநிலை மாற்றம் தொடர்பிலான அரச தலைவர்களின் மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 183 நாடுகளின் அரச தலைவர்கள் பாரிஸின் லொக்கோச்சி நகருக்கு வருகை தந்துள்ளனர்.

புவி வெப்பமாதல், பனிப்பாறைகள் உருகுதல், சமுத்திரத்தின் நீர் மட்டம் உயர்தல் போன்ற விடயங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer