Sunday, November 29, 2015

பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவித்த கருத்துக்கு பலரும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமீர் கான், நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து விட்டதால், நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து தனது மனைவி கிரண் ஆலோசித்ததாக தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர், அனுபம் கெர் உட்பட பல்வேறு அமைப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகையான ரவீனா டாண்டன் கூறுகையில், மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்த போது அமீருக்கு இந்த கவலை எழாதது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

நவம்பர் 26 அன்று நடந்த மும்பை தாக்குதல் சம்பவங்கள் அமீருக்கு இந்த கவலையை ஏன் அளிக்கவில்லை? இது முற்றிலும் அரசியல் உள்நோக்கமுள்ள பேச்சு. புத்திசாலித்தனமற்றது. உண்மையை சொல்லப்போனால் அவர்களுக்கு நரேந்திர மோடி பிரதமரானதைதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆனால் அதனை நேரடியாக தெரிவிக்கும் துணிவும் அவர்களுக்கு இல்லை. அதனால்தான் தேசத்தை குறை கூறுகின்றனர். இந்த தேசம் என்ன செய்தது என்று கேட்கும் நீங்கள், அதற்கு முன், இந்த தேசத்துக்கு என்ன செய்தீர்கள்? என்ற கேள்வியை உங்களை பார்த்து கேட்டுக் கொள்ள வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer