Monday, November 30, 2015

சுவிட்சர்லாந்து நாட்டில் குடிபோதையில் காரை ஓட்டி வந்த வாலிபர் ஒருவர் பொலிசாரின் ரோந்து வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Schwyz மாகாணத்தில் உள்ள Seewen என்ற நகரில் தான் இந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று நள்ளிரவு 2.40 மணியளவில் 27 வயதான நபர் ஒருவர் தனது காரில் Bahnhofstrasse என்ற பகுதியை நோக்கி பயணம் செய்துக்கொண்டு இருந்துள்ளார்.

இரவு நேரத்தில் தாகத்தின் காரணமாகவும், தூங்காமல் இருப்பதற்காகவும் குடித்து விட்டு காரை ஓட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சாலையில் வாலிபரின் கார் சென்றுக்கொண்டு இருந்தபோது எதிர்புறம் பொலிசாரின் ரோந்து வாகனம் ஒன்று வந்துள்ளது.

பொலிசார் வாகனம் தூரத்தில் வரும்போதே வாலிபரின் காருக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

ஆனால், வாலிபரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் பொலிசாரின் வாகனம் மீது நேருக்கு நேராக மோதியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இருதரப்பினருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. எனினும், இரண்டு கார்களும் மிகுந்த சேதாரம் அடைந்துள்ளன.

காரை விட்டு இறங்கி வந்த பொலிசார், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் குடிபோதையில் இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளார். எனினும், அவர் மது அருந்தியுள்ள அளவினை தெரிந்துக்கொள்ள ஓட்டுனரிடம் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நள்ளிரவில் குடிபோதையில் பொலிசார் வாகனம் மீது மோதிய இந்த விபத்தை தொடர்ந்து, வாலிபரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer