Monday, November 30, 2015

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சிலவற்றின் தடைகளை தான் அகற்றிவிட்டதாக, இலங்கை அரசு அறிவித்துள்ளது. குறித்த இந்த அமைப்புகளில் உள்ள தன் முக்கிய புள்ளிகள் ஏற்கனவே இலங்கை அரசோடு ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவிட்டார்கள் என்றும். அவற்றின் தடைகள் வெகுவிரைவில் எடுக்கப்படும் என்ற செய்தியை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. அது போக இந்த அமைப்பில் உள்ளவர்கள் விரைவில் இலங்கை செல்லவுள்ளார்கள் என்ற விடையத்தையும் நாம் வெளியிட்டு இருந்தோம். தற்போது உலகத் தமிழர் அமைப்பின் , பொறுப்பாளர் இமானுவேல் அடிகளார் , இலங்கை செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதில் அவருக்கு பட்டப் பெயர் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் இலங்கை அரசுக்கும் புலம் பெயர் தமிழர்களுக்கும் இடையே இணைப்பாளராக அவர் செயல்பட உள்ளாராம் என்பதாகும். புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளில், மக்களிடையே செல்வாக்கு இல்லாத அமைப்பாக கருதப்படுவது உலகத் தமிழர் பேரவை ஆகும். ஆனால் அவர்கள் தான் இலங்கை அரசோடு மிக நெருக்கமான உறவை தற்போது வளர்த்து வருகிறார்கள். இவர்கள் தாம்- தான் புலம்பெயர் தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் என்று கூறி பேச்சுவார்த்தைகளில் பங்குபெறுவது மிகவும் வேடிக்கையான விடையமாக உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer