Friday, November 27, 2015

நான் இந்தியனாக இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன் என்றும், இந்தியாவை விட்டு வெளியில் செல்லும் எண்ணமில்லை என்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.

சகிப்பின்மை, வெறுப்புத் தன்மை ஆகியவற்றால் இந்தியாவில் வசிக்க பயமாக இருக்கிறது என்று அமீர்கான் கூறியிருந்தார். இது பல்வேறு தரப்பிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அமீர்கான் வேண்டுமானால் பாகிஸ்தான் சென்று வசிக்கட்டும் என்று சிவசேனா அமைப்பு தெரிவித்திருந்தது. அதோடு வழக்கறிஞர் ஒருவர் அமீர்கான் மீது கான்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளார். தேசத்துரோகம் உள்ளிட்ட கடுமையான குற்றபிரிவின் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் மாதம் 1ம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில்தான் தாம் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும், இந்தியனாக வாழ்வதைஎண்ணிப் பெருமைப்படுகிறேன் என்றும் அமீர்கான் கூறியுள்ளார். அதோடு தமது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும், தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அமீர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer