வடக்கு மாகாணத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அதற்கான முதலீடுகள் செய்யப்படும் போது அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெப்பதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் உயர்கல்வி அமைச்சரும், அரசாங்கத்தின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போது தனியார் மருத்துவக் கல்லூரியின் அவசியம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் உரையாற்றினார். இதற்கு பதிலுரைக்கும் போதே, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்களா? என கேள்வி எழுப்பிய அமைச்சர் கிரியெல்ல, அந்த மாணவர்களுடன் விரிவாக கலந்து பேசி முடிவை தனக்கு அறியத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Monday, November 30, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment