Monday, November 30, 2015

பிரபல நடிகர்கள் நடிக்கும் படங்களில் மற்ற நடிகர்–நடிகைகள் கவுரவ வேடத்தில் நடிப்பது தற்போது பேஷன் ஆகி இருக்கிறது. இதுபோல் முக்கிய கதாநாயகர்கள் வேறு நடிகையுடன் ஜோடியாக நடித்தாலும் பிரபல நாயகிகள் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுவது சாதாரணமாகி இருக்கிறது.

அஞ்சலி ஏற்கனவே 'சிங்கம்–2' படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டார். இப்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படமான ‘சரைனொடு’ விலும் அஞ்சலி ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடுகிறார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த அவர்... நான் மட்டுமல்ல.. பல முன்னணி நடிகைகளும் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்கள். சினிமாவில் இப்போது இது சாதாரணமாகி விட்டது. நான் கவர்ச்சியாக ஆடுவதில் தவறு இல்லை. இதனால் என்னுடைய மற்ற படங்களுக்கு வியாபார ரீதியாக எந்த பாதிப்பும் வராது என்றார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer