Monday, November 30, 2015

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி மோதல் கட்சி மேலிடத்தை ஆத்திரம் அடைய வைத்துள்ளது.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷோபா இந்த பிரச்சினை தொடர்பாக விசாரித்து வருகிறார்.

நேற்று தமிழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரை போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார்.

விஜயதாரணியும் டெல்லி சென்று ஷோபாவை சந்தித்து தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறினார்.

கட்சி மேலிடத்தை பொறுத்தவரை கட்சி அலுவலகத்தில் நடந்த பிரச்சினையை கட்சிக்குள்தான் பேசி தீர்த்து இருக்க வேண்டும். அதற்காக போலீஸ் நிலையம் சென்று புகார் செய்திருக்க வேண்டியதில்லை என்று கருதுவதாக கூறப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் விஜயதாரணியின் செயலுக்கு நடிகை நக்மா கண்டனம் தெரிவித்துள்ளார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரான நக்மா தமிழக பொறுப்பாளராகவும் உள்ளார்.

சத்தியமூர்த்தி பவன் சம்பவத்தை கேள்விப்பட்டதும் விஜயதாரணி எம்.எல்.ஏ.வுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தன் தரப்பு புகாரை டெல்லி மேலிடத்திடம்தான் தெரிவித்து இருக்க வேண்டும். போலீஸ் நிலையத்துக்கு சென்று மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளை புகார் கொடுக்க வைத்தது தவறான செயல். ஏற்கத்தக்கதல்ல என்றார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer