Friday, November 27, 2015

உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2015ஐ ஐக்கிய நாடுகள் காலநிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

உலகின் வெப்பம் பதிவு செய்யத் தொடங்கியதில் இருந்து இந்த ஆண்டுதான் கடல் மேற்பரப்பு அதிக வெப்பநிலையில் உள்ளது. எனவே, இந்த ஆண்டு அதிக வெப்பம் பதிவான ஆண்டாக இருக்கும். இவை பூமிக்கு மிகவும் மோசமான செய்தியாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் கால நிலை ஆய்வு அமைப்பின் தலைவர் மைக்கேல் ஜெர்ராவுத் தெரிவித்துள்ளார்.

பாரீஸில் முக்கியத்துவம் வாய்ந்த பருவ நிலை மாநாடு அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், நடப்பு ஆண்டுதான், உலகின் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை அமைப்பு அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer