Sunday, November 29, 2015

இத்தாலியின் 21 வயதுக்குட்பட்டோர் உதைப்பந்தாட்ட அணியின் கோல் கீப்பரான கியான்லூகி டொன்னருமாவின் மதிப்பு 170 மில்லியன் யூரோ என்று அவரது ஏஜெண்ட் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் 21 வயதுக்குட்பட்டோருக்கான உதைப்பந்தாட்ட அணியின் கோல் கீப்பரான இருப்பவர் கியான்லூகி டொன்னருமா.

16 வயதான இவர் புகழ்பெற்ற ஏ.சி.மிலன் அணியின் கோல்கீப்பராகவும் விளையாடி வருகிறார்

இதுவரை சீரி-ஏவில் 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள டொன்னருமாவின் சிறப்பான செயல்பாடுகளை அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதன் காரணமாக அவருக்கு இளம் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே, தற்போது டொன்னருமாவை வாங்க . மான்செஸ்டர் யுனைடட், செல்சி உள்ளிட்ட பல்வேறு அணிகளும் போட்டி போடுகின்றன.

இந்நிலையில் டொன்னருமாவின் ஏஜெண்டான மினா ரியோலா, டொன்னருமாவை வாங்கும் அணி அவருக்கு விலையாக 170 மில்லியன் யூரோக்கள் தரவேண்டும் என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், டொன்னருமாவுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அவர் தற்போதே சாம்பியன் தான். எனினும் எதிர்காலத்தில் அவர் சிறந்த வீரராக திகழ்வார் என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer