Sunday, November 29, 2015

இந்திய மில்லியரான யோகேஷ் மேத்தாவின் மகன் ரோஹன் மேத்தாவின் திருமணம் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் புதன்கிழமை ஆடம்பரமாக நடைபெற்றது.

இந்தியாவை சேர்ந்த  மில்லினியரான யோகஷ் மேத்தாவின் ஒரே மகன் ரோஹன் மேத்தா.

மகனின் திருமணத்தை யோகேஷ் மேத்தா பிரமாண்டமாக நடத்த விரும்பினார்.

எனவே, மூன்று நாள் நடந்த இந்த திருமணத்திற்கு இந்திய ரூபாயில் சுமார் ரூ.140 கோடி செலவு செலவு செய்துள்ளார்.

இதில் சுமார் 500 விருந்தினர்கள் கலந்துக்கொண்டார்கள். இவர்களுக்கு புளோரன்ஸ் நகரத்தை சுற்றியிருந்த ஆடம்பர ஹொட்டல்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முழுவதும் இந்திய பாரம்பரிய முறைப்படி நடைப்பெற்ற இந்த திருமணத்தில் முதல் இரண்டு நாட்கள் ஆடல், பாடல் என கலைக்கட்டியது.

திருமண விழாவின் இறுதி நாளான இன்று மணமகன் ரோஹன் மேத்தா, திருமணம் நடைபெற்ற இடத்திற்கு யானையின் மீது அமர்ந்து வருவதாக இருந்தது.

ஆனால் யானையின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் விலங்கு நலம் ஆகியவற்றை காரணம் காட்டி இதற்கு புளோரன்ஸ் நகர சபை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மணமகன் குடும்பத்தினர் மிகவும் வருத்தமடைந்தனர். இறுதியில் அனைவரும் முன்னிலையிலும் மணமகன் ரோஹன் தனது மனைவி ரோஷினியை கரம்பிடித்தார்.

மிகவும் ஆடம்பரமாக நடைபெற்ற இந்த திருமண விழாவால் இத்தாலியின் புளோரன்ஸ் நகரமே களைக்கட்டியது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer