Friday, October 2, 2015

நண்பர் வீட்டின் குளியல் அறையில் ரகசிய கேமராவை பொருத்தி, நண்பரின் மனைவி குளிப்பதை படம்பிடித்து ரசித்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை நன்மங்கலம் சித்தார்த் தெரு 2–வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அண்ணாமலை(வயது 30). இவரது சொந்த ஊர் சிவகாசி. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், வேளச்சேரியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், மனைவியுடன் வசித்து வந்தார்.

அதே அடுக்குமாடி குடியிருப்பில் அண்ணாமலை வீட்டின் பக்கத்து வீட்டில் அவரது நண்பர் ஒருவர் மனைவியுடன் வசித்து வருகிறார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவரும், சிவகாசியை சேர்ந்தவர்.

இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் அண்ணாமலை குடும்பத்தினரும், நண்பரின் குடும்பத்தினரும் நெருங்கி பழகி வந்தனர். ஒருவரது வீட்டுக்குள் ஒருவர் சகஜமாக சென்று வந்தனர்.
குளியல் அறையில் கேமரா

இந்தநிலையில் அண்ணாமலையின் நண்பர் அவரது வீட்டின் குளியல் அறையில் சென்று குளிக்க சென்றார். அப்போது அங்கு பேனா வடிவில் வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதை கண்டார். அதை கையில் எடுத்து பார்த்த போது அது பேனா வடிவிலான கேமரா என்பது தெரியவந்தது.

அதை தனது வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் போட்டு பார்த்தார். அதில் குளியல் அறையில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் குளிக்கும் ஆபாச காட்சிகள் பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வாக்குவாதம்

தனது வீட்டுக்கு சகஜமாக வந்து செல்வது நண்பர் அண்ணாமலை மட்டும்தான் என்பதால் அவர் மீது சந்தேகம் அடைந்தார். இதுபற்றி அண்ணாமலையிடம் கேட்டார். ஆனால் முதலில் மறுத்த அவர், பின்னர் ‘‘நான் அப்படிதான் செய்வேன். உன்னால் என்ன செய்ய முடியும்?’’ என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபற்றி அண்ணாமலையின் நண்பர், பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையிடம் விசாரணை நடத்தினர்.
நண்பர் கைது

அப்போது அவர், தனது நண்பரின் மனைவி அழகாக இருப்பார் என்பதால் அவரது அழகை ரசிக்க விரும்பியதாகவும், எனவே நண்பரின் வீட்டுக்குள் சகஜமாக சென்று வரும் தான், அவரது குளியல் அறையில் யாருக்கும் தெரியாமல் பேனா வடிவிலான கேமராவை வைத்ததாகவும், அதில் பதிவாகும் நண்பரின் மனைவி குளிக்கும் காட்சிகளை தனது வீட்டில் இருந்தபடியே கம்ப்யூட்டரில் பார்த்து ரசித்து வந்ததாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அண்ணாமலையை கைது செய்த போலீசார், அவரை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer