Sunday, August 30, 2015

இந்திராணி ஷீனா போராவைக் கொலை செய்வதற்கு முன்னதாக தன்னை கொல்ல முயற்சித்ததாக அவரது மகன் மிக்கயில் போரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்டார் இந்தியா சேனலின் முன்னாள் தலைமை செயலதிகாரி பீட்டர் முகர்ஜியின் 2வது மனைவி இந்திராணி முகர்ஜி பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன.

இந்திராணி தனக்கு ஏற்கனவே 2 முறை திருமணமானதையும் தனது குழந்தைகளை தனது சகோதரி மற்றும் சகோதரன் என்றும் கூறி கடந்த 2002ம் ஆண்டு பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்

இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு அவரது மகள் ஷீனா அவரது மூன்றாம் கணவர் பீட்டரின் மகனை காதலித்ததால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தக் கொலை தொடர்பாக தற்போது இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா மற்றும் கார் ஓட்டுனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் முக்கிய ஷீனாவின் சகோதரர் மிக்கயில் போரா சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஷீனாவை இந்திராணி கொலை செய்ததற்கான உண்மைக் காரணம் தனக்கு தெரியும் என மிக்கயில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஷீனாவைப் போலவே தன்னையும் இந்திராணி கொல்ல முயற்சித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார் மிக்கயில்.

அவர் கூறுகையில், 2012 ஏப்ரல் 24ம் திகதி ஷீனா கொலை செய்யப்படுவதற்கு முன் என்னை கொலை செய்வதற்கு எனது தாய் இந்திராணி 3 முறை முயற்சி செய்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் தப்பித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer