Thursday, July 30, 2015

போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கியஸ்தரான மொஹம்மட் முபாரக் மொஹம்மட் முஜாஹிம் என்பவரைக் கைது செய்ய இன்டர்போலின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

மலேசியாவில் வாழும் குறித்த நபர், இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘செல்வம்’ ‘பிராவர்தனய’ ஆகிய சிங்கள திரைப்படங்களின் தயாரிப்பாளராவார்.

‘செல்வம்’ ஆவணப் படம் வெளியீட்டு நிகழ்வில் அதன் தயாரிப்பாளர் மொஹமட் முஜாஹிம், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் நெருக்கமாகக் காணப்பட்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி செல்வம் ஆவணப்படம் கொழும்பு ரீகல் திரையரங்கில் திரையிடப்பட்டது. மொஹமட் முஜாஹிமின் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தில் சன்ஜய லீலாரட்ன நடித்திருந்தார். தமிழ் மக்களின் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணப் படம் தயாரிக்கப்பட்டிருந்தது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர் ‘செல்வம்’ என்பதே இத்திரைப்படத்தின் பிரதான பாத்திரமாக அமைந்திருந்தது. இப்பட வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer