Friday, July 31, 2015

கடந்த முப்பது வருடங்களில் நாக்பூர் சிறையில் யாகூப் மேமன்தான் தூக்கிலிடப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் புனேயில் உள்ள எரவாடா சிறை மற்றும் நாக்பூர் சிறையில் மட்டும்தான் தூக்கிடும் வசதி உள்ளது.ஆனால், இந்த சிறைகளில் இதுவரை யாரும் தூக்கிலிடப்படவில்லை. கடந்த 30 வருடங்களில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் அஜ்மல் கசாப் எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார். இதையடுத்து வரலாற்று முதல் நிகழ்வாக யாகூப் மேமன் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விடிய விடிய நடைபெற்று அதிகாலை 4.55 மணிக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டு மேமன் விடியற்காலை 6.38 மணிக்குத் தூக்கிலிடப்பட்டார்.

கடந்த 30 வருடங்களுக்குப் பிறகு நாக்பூர் சிறையில் முதன் முதலாகத் தூக்கிலிடப்பட்ட மேமன் தமது 53வது பிறந்த நாளில் தூக்கிலிடப்பட்டார். எரவாடா சிறையில் அஜ்மல் கசாபைத் தூக்கிலிட்ட காவலர்தான் மேமனையும் தூக்கிலிட்டார் என்று தெரிய வருகிறது.கடந்த 10 வருடங்களில் ராஜீவ் கொலையாளிகள் உட்பட 3 ஆயிரத்து 705 பேரின் தூக்குத் தண்டனை ஆயுள்த் தண்டனையாகக் குறைக்கப்பட்டு உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குரு உட்பட 4 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர் என்றும் தெரிய வருகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer