Thursday, July 30, 2015

யூகூப் மேமனை தூக்குத் தண்டனையில் இருந்து காப்பாற்ற விடிய விடிய உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று பின்னர் மேமன் தூக்கிலிடப் பட்டதாகத் தெரிய வருகிறது.

யாகூப் மேமன் தரப்பிலிருந்து கடைசியாக குடியரசுத் தலைவருக்கு 14 பக்கங்கள் அடங்கிய கருணை மனு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மனுவை குடியரசுத் தலைவர் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப, உள்துறை அமைச்சகம் மத்திய அரசின் தூக்குத் தண்டனை என்கிற முடிவில் மாற்றமில்லை என்று, மத்திய அரசின் முடிவை குடியரசுத் தலைவருக்கு தெரிவித்ததாகத் தெரிய வருகிறது. இதையடுத்து யாகூப் மேமனுக்கு தூக்கு என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து பிரஷாந்த் பூஷன் உள்ளிட்ட இரு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்துவின் இல்லத்துக்குச் சென்று, யாகூப் மேமன் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்தனர்.உடனடியாக மூத்த நீதிபதிகள் முன் ஆலோசனை நடத்திய நீதிபதி ஹேச் எல் தத்து, மனுவை விசாரணைக்கும் எடுத்துக் கொண்டதாகத் தெரிய வாருகிறது.

விடிய காலம் 3 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் துவங்கிய இந்த மனு விசாரணை ஒன்றரை மணி நேரம் நடைப்பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து அனைத்தும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே நடைபெற்று வருகிறது என்று கூறி, மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள தள்ளுபடி செய்தனர். காலை 6 மணி 38 நிமிடத்துக்கு யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.7 மணிக்கு யாகூப் மேமன் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பின்னர் மேமனின் உடல் மும்பையில் உள்ள அவரது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer