Wednesday, July 29, 2015

'வந்தா மல' படத்தில்  புகழ்பெற்ற பராசக்தி படத்தின் பாடல் ரீமிக்ஸ் ஆகவுள்ளது. சிவாஜி கணேஷன் சினிமாவில் அறிமுகமான முதம் படம் ‘பராசக்தி’ மேலும் கலைஞர் வசனகர்த்தாவாக அறிமுகமாகி புகழ்பெற்ற படமும் இதுவே.

இந்த படத்தில் ”தேசம் ஞானம் கல்வி” எனத் துவங்கு உடுமலை நாராயணக் கவியால் எழுதப்பட்ட பிரபல பாடல் ரீமிக்ஸ் ஆக இருக்கிறது. 1952ம் ஆண்டு வெளியான இப்படத்தை ஆர்.கிருஷ்ணன், எஸ்.பஞ்சு இருவரும் இயக்கியுள்ளார்கள்.

இந்த படத்தின் பாடல் தற்போது ’வந்தா மல’ படத்தில் ரீமிக்ஸ் செய்து இடம்பெற இருக்கிறது. மேலும் இந்த பாடலுக்கான உரிமத்தை அளித்த சரிகம நிறுவனத்துக்கு படக்குழுவினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர். அதேபோல் இப்பேற்பட்ட பாடல் தங்களது படத்தில் இடம்பெற இருப்பதை பெருமையாக நினைப்பதாகவும் கூறியுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer