Wednesday, July 29, 2015

கண்டி, மகாவலி கங்கையின், கலிகமுவ ஆற்றுப் பகுதியில் நீராட வந்த பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் பிரதேசவாசிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.பொது இட த்தில் தரக்குறைவான முறையில் நடந்துகொண்டதாலேயே அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று அறியப்படுகிறது.

இவ்வாறு மாணவர்கள் 4 பேர் மற்றும் மாணவியொருவருமே பேராதெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் குறித்த இட த்திற்கு வந்தோர், போதையில் கூச்சலிட்டு ஆட்டம் போட்டுள்ளதாக தெரியவருகின்றது. மேலும் குறித்த பெண்ணை அவர் அனுமதியுடன் அம்மாணவர்கள் நிர்வாணமாக படமெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணும் உச்சக் கட்ட மதுபோதையில் இருந்துள்ளார்.

தற்போது இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer