Thursday, July 30, 2015

மேஷம்:  குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

ரிஷபம்: மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலை களை இழுத்து போட்டு பார்க்க வேண்டி வரும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகமாகும். தானுண்டு தன் வேலை யுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

மிதுனம்:  பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத் தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவு வார்கள். மாலை 6 மணி முதல் சந்திராஷ்ட மம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள். 
 
சிம்மம்:  புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியா பாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத் தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக் கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மரியாதைக் கூடும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். 

தனுசு: இன்றும் மாலை 6 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
 
மகரம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து  போகும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப் படுத்தி பேசுவார்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்க பாருங்கள். உத்யோகத்தில் அதிகாரி களுடன் மோதல்கள் வேண்டாமே. மாலை 6 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

கும்பம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மீனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவு வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ் தர்களை சந்திப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer