Monday, June 29, 2015

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் டோனி இல்லாத போது ஹர்பஜன் சிங் சேர்க்கப்பட்டிருப்பது வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.

அதிரடியில் அசத்தும் அவுஸ்திரேலியாவை கூட ஆட்டங்காண வைப்பவர் ஹர்பஜன் சிங். டெஸ்ட் போட்டிகளிலும் தனது சுழலில் எதிரணியை இவர் மிரட்டுவார்.

இந்நிலையில் திடீரென்று இவர் பார்ம் இல்லை என்று இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

இதைத் தொடர்ந்து வங்கதேச தொடரில், கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் 2 வருங்களுக்கு பிறகு இடம் பிடித்தார்.

அந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். டெஸ்டில் இருந்து டோனி ஓய்வு பெற்றதால் அதில் அவர் விளையாடவில்லை.

இந்த நிலையில் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணிக்கு அணித்தலைவராக ரஹானே தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதில் டோனி உட்பட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஹர்பஜன் சிங் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார்.

டோனி தான் ஹர்பஜன் சிங்கை அணியில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாக ஏற்கனவே கூறப்பட்டது.

ஹர்பஜன் மட்டுமல்ல ஷேவாக், ஜாகீர்கான், யுவராஜ் போன்றவர்களையும் அணியில் சேர்க்க டோனி எதிர்ப்பு தெரிவிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

நிலைமை இப்படி இருக்க, டோனி இல்லாத நிலையில் ஹர்பஜன் சிங் அணியில் இடம் பிடித்திருப்பது மேலும் பல வீயூகங்களை கிளப்பியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer