Monday, June 29, 2015

டுனிசியா நாட்டில் கொலை வெறி தாக்குதல் நடத்திய அப்பாவி மக்களை கொன்று குவித்த ஒரு தீவிரவாதியை மகனாக பெற்றதற்கு வெட்கப்படுவதாக அவனது தந்தை பலியானவர்களின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான டுனிசியாவில் உள்ள செளசி கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீவிரவாதி ஒருவன் நடத்திய கொலை வெறி தாக்குதலில் 38 சுற்றுலா பயணிகள் பலியாயினர்.

இந்த தாக்குதல் நடத்திய Seifeddine Rezgui(23) என்ற தீவிரவாதியின் தந்தையான Hakim Rezgui என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

பின்னர், பொலிஸ் காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அப்பாவி மக்களை கொல்லும் ஒரு கொடூரமான மிருகத்தை மகனாக பெற்றதற்கு தான் வெட்கப்படுவதாக தெரிவித்தார்.

தன்னுடைய மகன் சமீபகாலமாக புது நண்பர்களுடன் பழகி வந்ததால் தான் அவனுக்கு இதுபோன்ற கொடூர குணத்தை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

டுனிசியாவில் இறந்த அப்பாவி மக்களை என்னுடைய குடும்பத்தினராகவே கருதுகிறேன். அவர்களின் ஒவ்வொருவரின் இழப்பிற்காக தானும், தனது மனைவியும், ஒட்டு மொத்த குடும்பமும் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறோம்.

தாக்குதல் நடந்த இடத்தில் தன்னுடைய உயிரையும் இழந்திருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறேன்.

பிரித்தானியா நாட்டிலிருந்து சுற்றுலாவிற்கு வந்த காரணத்திற்காகவே இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவே தான் கருதுகிறேன். இந்த தாக்குதலை நிகழ்த்திய தன்னுடைய மகனின் செயலால் கடவுள் எங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என தீவிரவாதியின் தந்தை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரித்தானிய நாட்டின் உள்துறை செயலாளரான Theresa May கூறுகையில், டுனிசியாவில் பலியானவர்களில் பிரித்தானியாவை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 22க்கும் அதிகமாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும், இறந்தவர்களின் அடையாளத்தை காணும் பணி தற்போது நடந்து ண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer