காந்தி கொலை வழக்கு தொடர்பான எப்.ஐ.ஆரின் நகலை கேட்ட சமூக ஆர்வலருக்கு அந்த ஆவணங்களை வழங்க வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் போலங்கீர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த பண்டா என்ற சமூக ஆர்வலர், காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர், குற்றப்பத்திரிகை மற்றும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கை உள்பட 7 தகவல்களை கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மனு அனுப்பியிருந்தார்.
இந்த மனு குறித்து பண்டாவுக்கு பதிலளித்த ஆவண காப்பகம், காந்தியின் குடும்பத்தினர் கேட்டதற்கு இணங்க, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்று தெரிவித்தது.
மேலும், காந்தி கொலை செய்யப்பட்டபோது துக்ளக் ரோடு காவல் நிலையம் தான் அந்த வழக்கை பதிவு செய்தது என்றும் தேவைப்பட்டால் அங்கு சென்று ஆவணங்களை பார்த்துக் கொள்ளுமாறும் பதிலளித்தது.
இதையடுத்து தாம் கேட்ட விவரங்கள் தரப்படவில்லை என்றும் அவற்றைத் தரும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரி மத்திய தகவல் ஆணையத்தில் மனுதாரர் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், காந்தி கொலை செய்யப்பட்ட ஆவணங்கள் இருந்தால் அதன் நகல்களை பெற்று பண்டாவுக்கு வழங்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Monday, June 29, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment