தெலுங்கானா பெஸ் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது அழகை காட்டி பதவி உயர்வு வாங்குகிறார் என அவுட்லுக் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அழகு, அவரது உடையணியும் விதம் போன்றவையால் அவர் பதவி உயர்வு பெறுகிறார் என்று குறிப்பிட்டுள்ளது.
இவர், சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் கலந்துகொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளார் என்ற தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சி குறித்த கேலிச்சித்திரம் ஒன்றையும் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அந்த கேலிச்சித்திரத்தில் பெண் அதிகாரி ஒருவர் நடந்து வருவதுபோலவும், தெலுங்கானா முதல்வர் கையில் கமெராவை வைத்துக்கொண்டு அவரை பார்க்கிறார், இவருடன் இணைந்து பிற அரசியல்வாதிகளும் அதனை பார்க்கின்றனர்.
ஸ்மிதா சபர்வால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியை தான் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது, 1977ம் ஆண்டு பிறந்த இவர் 2001ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளில் துணை ஆட்சியராக பொறுப்பேற்றார்.
பல ஆண்டுகள் ஆந்திராவில் பணியாற்றிய அவர், கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கரீம்நகர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
2014ம் ஆண்டு யூன் மாதம் 6 ஆம் திகதி தெலுங்கானா முதல்வர் அலுவலக தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, June 30, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment