Monday, June 29, 2015

கடன் சுமையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள கிரீஸ் நாடு அனைத்து வங்கிகளையும் மூட அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கிரீஸ் நாடு கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்கிழமைக்குள் அந்நாடு 1.6 பில்லியன் யூரோவை சர்வதேச நாணய நிதியத்துக்குள் செலுத்தியாக வேண்டும்.

இந்நிலையில் கூடுதலாக அந்நாடு அவகாசம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் கிரீஸ் நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் உள்ள வங்கிகள் எல்லாம் திங்கட்கிழமை மூடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் தானியங்கி இயந்திரத்தில் இருந்து பணம் எடுப்பதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வங்கி கணக்கில் இருந்து நாள் ஒன்றுக்கு 60 யூரோ மட்டுமே எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கு வர்த்தகமும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 6 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பணத்தை எடுப்பதற்காக ஏராளமானோர் தானியங்கி இயந்திரம் முன் வரிசையாக காத்திருப்பதாக கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer