Wednesday, June 24, 2015

நடித்திருப்பது மூன்று படங்கள் என்றாலும், தமிழ்த் திரையுலக ரசிகர்களின் மனதில் நீங்கா இடப்பிடித்திருப்பவர் ஏமி ஜாக்சன். ஐ படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் காத்திருந்ததால் ஏற்பட்ட இடைவெளியை போக்கும் விதத்தில் சில மாதங்களில் முடியக் கூடிய நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் ஏமி. உதயநிதிக்கு ஜோடியாக கெத்து படத்திலும், தனுஷுக்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி 2(என்று சொல்லப்படுகிறது) படத்திலும், அட்லி-விஜய் இணையும் திரைப்படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.

செல்லும் இடங்களிலெல்லாம் ஏமி மூன்று படங்களில் தனுஷுடன் நடிக்கும் படம் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார். தனுஷ் என்னை இப்படி மாற்றிவிட்டார், அப்படி மாற்றிவிட்டார் என தனுஷ் புராணம் படிக்கிறாராம் பிரிட்டீஷ் பேரழகி. அப்படி அந்த செட்ல என்ன தான் நடக்குது என விசாரித்தால்.... ’மேக்-அப் எதுவுமே வேணாம். ஒரு பொண்ணா எப்படி இருப்பீங்களோ, அப்படி இருந்தா போதும்’ என்று சொல்லிவிட்டாராம் தனுஷ். ஆனால் பிரிட்டீஷுலேயே வளர்ந்த ஏமி ஜாக்சன் எப்போதும் விளையாட்டாக எதையாவது செய்துகொண்டே இருக்க, தமிழ் பொண்ணு எப்படி இருக்கவேண்டும் என க்ளாஸ் எடுத்திருக்கிறார்.

எந்த வசனத்தையும் முன்பே கொடுத்து பயிற்சி செய்துகொள்ளச் சொல்லாமல் ஸ்பாட்டிலேயே வசனம் கொடுத்து படிக்க சொல்கிறாராம். ’ஒரு பொம்மையைப் போல் நிற்க வைத்து படம் எடுக்காமல் இப்படி நேச்சுரலாக கதாபாத்திரமாகவே மாற்றி நடிக்க வைப்பதால் எனது நடிப்புத் திறமையும் வளர்கிறது. நானும் நிறைய கற்றுக்கொள்கிறேன். தனுஷ் என்னை தமிழ்ப் பொண்ணாகவே மாற்றிவிட்டார்’ என்கிறார் ஏமி.

0 comments :

Post a Comment

 
Toggle Footer