ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அதுபோல, தேசியப் பட்டியல் நியமனமும் வழங்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்களுடன் நேற்று திங்கட்கிழமை முழு நாளும் பேச்சு நடாத்தினார். இதில், இடதுசாரிக் கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக சந்திப்பில் கலந்துகொண்ட இடதுசாரி தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம ஜயந்த, சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபாலடி சில்வா ஆகியோருடனும் ஜனாதிபதி நேற்று மாலை பேச்சு நடத்தியுள்ளார்.
தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, ஆசனப் பங்கீடு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளன. அத்துடன், சுசில் பிரேமஜயந்த மஹிந்த அணியில் இணையவுள்ள விவகாரம் பற்றியும் அங்கு பேசப் பட்டுள்ளது. இதற்கிடையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட அறுவரடங்கிய ஒருங்கிணைப்புக்குழு தனது அறிக்கையை இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.
Home
»
Sri Lanka
»
மஹிந்தவுக்கு வேட்புமனுவும் இல்லை; தேசியப்பட்டிலிலும் இடமில்லை: மைத்திரி மீண்டும் திட்டவட்டம்!
Tuesday, June 30, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment