Monday, June 29, 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேமஜயந்த மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரோடு இன்று திங்கட்கிழமை இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு கட்சிகள் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பங்களும், ஆதரவு நிலைப்பாடுகளும் பிளவினை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சுதந்திரக் கட்சிக்குள் குறிப்பிட்டளவானவர்கள் கோரி வரும் நிலையில், எந்தவொரு தருணத்திலும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அனுமதியளிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியோடு இருப்பதாக தெரிகின்றது.

அத்தோடு, பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களோடு சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு திரும்பவும் வேட்புமனு அளிப்பதை நிறுத்தி வைக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இந்த நிலைகளையடுத்து, மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு பலரும் தாவி வருவதாக தென்னிலங்கைச் செய்திகள் கூறுகின்றன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer