Tuesday, June 30, 2015

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. விவசாயி, இவரது மனைவி சுமதி. இவர்களது மகள் சந்தியா (20). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்.திருவலஞ்சுழி மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ், சுசிலா தம்பதியரது மகன் ராஜசுந்தரம் (25). பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு விவசாய வேலை செய்து வருகிறார்.சந்தியாவின் அத்தை மகன் ராஜசுந்தரம். முறைப்பிள்ளைகளான இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கிப் பழகியதில் சந்தியா கர்ப்பமடைந்தார். கர்ப்பம் அடைந்த தகவலை மகிழ்ச்சியுடன் காதலனிடம் கூறியுள்ளார். அதற்கு ராஜசுந்தரம் கர்ப்பத்தை கலைத்துவிடுமாறு கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சந்தியா, இதுகுறித்து கடந்த 5 மாதங்களுக்கு முன் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து, திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜசுந்தரத்திடம் கூறினர். அவரும் அப்போது ஏற்று கொண்டார்.

பின்னர் இருதரப்பு பெற்றோரும் பேசி 29.6.15ல் திருமணம் செய்ய தேதி முடிவு செய்யப்பட்டது. திருமண பத்திரிகை அடித்து உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது. திருமணம் நேற்று திருவலஞ்சுழியில் உள்ள மணமகன் வீட்டின் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக நேற்று முன்தினம் மணமகள் வீட்டிலிருந்து மணமகளும் உறவினர்களும் மணமகன் வீட்டிற்கு வந்து விட்டனர்.இதையடுத்து நேற்று காலை முகூர்த்தத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தாலிகட்டும் நேரம் நெருங்கியபோது மணமகன் ராஜசுந்தரம், நான் ஏற்கெனவே கேட்டபடி மோட்டார் சைக்கிள், சீர்வரிசை பொருட்கள், 8 பவுன் நகை வேண்டும் அதை கண்ணில் காட்டினால் தான்தாலி கட்டுவேன் என கூறிவிட்டார்.

இதனால் திருமண வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. பெண் வீட்டார் கலங்கினர். மணமகளோ பதறினார், வயிற்றில் 8 மாத குழந்தை, தாலி ஏறும் நேரத்தில் மணமகன் இப்படி மாறிவிட்டாரே என கண்ணீர் விட்டார். ஆனால் எதையும் கண்டுகொள்ளாத ராஜசுந்தரம் தலைமறைவாகிவிட்டார்.பெண் வீட்டார் மணமகனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 7 மணி வரை மணமகன் கிடைக்கவில்லை. எனவே பெண் வீட்டார் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரேகாராணி மணமகனின் செல்போனில்தொடர்பு கொண்டு உடனே வரும்படி கூறினார். அதன்படி நள்ளிரவில் மணமகன் ராஜசுந்தரம் வீட்டுக்கு வந்தார். அவாிடம் இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து மணமகன் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். பினனர் பெற்றோர் முன்னிலையில் ராஜசுந்தரம், காதலி கழுத்தில் மாலையிட்டு தாலி கட்டினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer