Sunday, June 28, 2015

ஸ்மார்ட் போனில் பொதுசேவையைப் பயன்படுத்துவதில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஸ்மார்ட் போனில் டிவிட்டர், முகநூல், வாட்ஸ் ஆப் என்று பல பொது சேவைகள் உள்ளன. இதை அதிகமாகப் பயன்படுத்தி பயனடைபவர்கள் யார் என்று தகவல் தொடர்பு சேவை மையம் நடத்திய ஆய்வில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. கையில் ஸ்மார்ட் போன் வைத்துக்கொண்டு எப்போதும் பொது சேவையை இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இதில் பெரும்பாலான இந்தியர்கள் உறங்கினாலும், அவர்களின் ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ் ஆப் சேவைகள் உறங்குவதில்லை என்றும் அந்த ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer