Monday, June 29, 2015

அதென்னவோ தெரியவில்லை... தீபிகா படுகோனை தமிழில் நடிக்க வைக்க யார் யாரோ முயன்றும் முடியவில்லை. ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார்.

அந்த படம் துவங்கும் முன்பே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அந்த படமே டிராப். அதற்கப்புறம் கொடுத்த பணத்திற்கு பொம்மையாக நடித்துவிட்டு போனார். சுல்தான் தி வாரியர் படத்தில் வந்த மோஷன் கேப்சரிங் ஸ்டைல் தீபிகாவின் பேரழகை நசுக்கி நெ ளித்துக் காட்ட, தீபிகா மீதிருந்த அபிப்ராயமே அவுட் ரசிகர்களுக்கு. இந்த நிலையில்தான் அவரை மீண்டும் தமிழில் நடிக்க வைக்க முயல்கிறார் கே.வி.ஆனந்த். விரைவில் அஜீத் நடிக்கும் ஒரு படத்தை அவர் இயக்கவிருக்கிறார். (இப்ப கேட்டா, யாரு சொன்னா? அதெல்லாம் இல்லை என்று மறுக்கிறது கே.விஆனந்த் வட்டாரம்) அந்த படத்தில் நடிக்கதான் தீபிகா படுகோனேவுக்கு அழைப்பு போயிருக்கிறதாம். முன்னாடியே அஜீத்துக்கு ஒரு ஹெல்த் செக்கப் பண்ணிடலாமா கண்ணு?

0 comments :

Post a Comment

 
Toggle Footer