சென்னையில் இன்று தொடங்கப்பட்ட முதல் மெட்ரோ ரயிலை சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பிரீத்தி என்பவர் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
இன்று பகல் 12.16 மணிக்கு ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி புறப்பட்ட முதல் மெட்ரோ ரயிலை பிரீத்தி என்பவர் ஓட்டினார்.
மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் ஏற்கனவே செய்துவந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான ஓட்டுனர் வேலைக்கு இவர் மனு செய்து அதிஷ்டவசமாக இந்த பணிக்காக தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர், இதற்கான தனிப் பயிற்சிகளை நிறைவு செய்து, சென்னையின் முதல் மெட்ரோ ரயிலை இயக்கியவர் என்ற சிறப்பிடத்தை பிடித்துள்ளார்.
Monday, June 29, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment