Tuesday, June 30, 2015

இன்ஜினியரிங் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய புதுவை எம்பிஏ மாணவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மீனா (23, பெயர் மாற்றப்பட்டு உள்ளது), வளவனூர் அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிஇ படிக்கிறார். விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார். இவருக்கும், கடந்தாண்டு எம்பிஏ முடித்த புதுவை திருக்கனூரை சேர்ந்த ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.இதையடுத்து மீனாவை அடிக்கடி ராஜா வெளியே அழைத்து சென்று வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மீனாவை வீட்டிற்கு அழைத்து சென்ற ராஜா, தாலி கட்டி உள்ளார். தொடர்ந்து ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

மேலும் அடிக்கடி அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மே மாதம் படிப்பு முடிந்து சென்ற ராஜா, பின்னர் மீனாவை கண்டு கொள்ளவில்லை. செல்போனில் பேசினாலும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். இதையடுத்து ராஜாவை நேரில் சந்தித்து ஊரறிய திருமணம் செய்து கொள்ளுமாறு மீனா வற்புறுத்தி உள்ளார். அப்போது உன்னை ஆபாசமாக படம் பிடித்து வைத்து உள்ளேன். ஊரறிய திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினால் இன்டர்நெட்டில் பரவ விடுவேன் என மிரட்டி உள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி மீனா, இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer