Monday, June 29, 2015

கனடா பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

டச்சு ஜோடியான முஸ்கன்ஸ் - பியக் ஜோடியை 21-19, 21-16 என்ற நேர் செட் கணக்கில் ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி வீழ்த்தியது.

இந்தியாவின் அசத்தல் ஜோடியான ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பாவுக்கு இது 4வது சாம்பியன் பட்டம் ஆகும்.

வானவேடிக்கை காட்டிய கிறிஸ் கெய்ல்

மேற்கிந்திய தீவுகளின் மிரட்டல் ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், கரீபியன் லீக் தொடரில் விளையாடி வருகிறார்.

ஜமைக்கா டல்லவாஸ் அணியின் தலைவராக செயல்படும் கிறிஸ் கெய்ல், செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது மிரட்டி விட்டார்.

முதலில் விளையாடிய செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 118 ஓட்டங்களே குவிக்க முடிந்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜமைக்கா டல்லவாஸ் அணி விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாத்தில் 10 ஓவர்கள் மீதமுள்ள நிலையிலே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இதில் கெய்ல் எதிரணி வீரர்களின் பந்தை சிதறடித்தார். இவர் 36 பந்துகளில் 90 ஓட்டங்கள் (9 சிக்சர், 6 பவுண்டரி) அடித்தார். வால்டன் 25 ஓட்டங்கள் குவித்தார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 'திரில்' வெற்றி

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியை பந்துவீச்சில் கட்டுப்படுத்திய இந்திய அணி, 45.3 ஓவர்களில் 125 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது.

இதனால் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 'திரில்' வெற்றி பெற்றது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer