Monday, June 29, 2015

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு சிம்பு - கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் படம் “ அச்சம் என்பது மடமையடா”. பல்லவி சுபாஷ் நாயகியாக நடித்துவருகிறார்.

தமிழில் சிம்புவும், தெலுங்கில் நாகசைதன்யாவும் ஹீரோவாக நடித்துவருகிறார்கள். ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தமிழிலும் படமாக்கப்பட்டுவருகிறது. மஞ்சிமா மோகன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து பாடகர் பாபா செகல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் பாபா நடிக்கிறார். அவரே இப்படத்தின் வில்லன்களில் ஒருவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதைப் பற்றி பாபா செகல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ என் உயிர் நண்பன் கெளதம் இயக்கிவரும் அச்சம் என்பது மடமையடா படத்தில் மோசமான போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறேன்” என்று ட்விட் செய்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer