Monday, June 29, 2015

பிரான்ஸ் நாட்டில் உயரத்திலிருந்து கீழே குதிக்கும் விளையாட்டில் காதலர்கள் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சம்பவத்தில் காதலி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு பிரான்ஸில் உள்ள Audincthun நகரில் bungee jump எனப்படும் ’கால்களில் கயிறு கட்டிக்கொண்டு உயரத்திலிருந்து தலைகீழாக குதிக்கும்’ விளையாட்டு மிக பிரபலம்.

இந்த விளையாட்டில் பங்கேற்பதற்காக நேற்று இளம்ஜோடிகள் அங்குள்ள உயரமான ‘கிரேன்’ பகுதிக்கு வந்திருந்தனர்.

சுமார் 65 மீற்றர் உயரம் உள்ள அந்த கிரேனின் உச்சிக்கு சென்ற அவர்கள், தங்களுடையை கால்களில் கயிற்றை கட்டிக்கொண்டு ஒன்றாக தலைகீழாக குதித்துள்ளனர்.

15 மீற்றர் உயரம் வந்தபோது, கயிறு தவறுதலான முடிச்சுகளால் அறுந்து இரண்டு பேரும் மிக வேகமாக தரையில் தலைகீழாக மோதியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், ஆழமான காயங்கள் அடைந்த அந்த பெண்ணின் காதலனை அங்குள்ள Lille மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

நபருக்கு காயங்கள் மிக மோசமாக ஏற்பட்டுள்ளதால், அவரது உடல் நிலை குறித்து தற்போது எந்த தகவலும் தெரிவிக்க முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், காதலர்கள் பயன்படுத்திய கயிறு உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி, விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer