Monday, June 29, 2015

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள அதிகபட்ச பாதுகாப்புக் கொண்ட கிளிண்டன் சிறைச்சாலையில் இருந்து கடந்த ஜூன் 6 ஆம் திகதி 49 வயதுடைய ரிச்சர்டு மேத் மற்றும் டேவிட் ஸ்வீட் என்ற இரு கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப் பட்ட கைதிகள் தமது அறைகளை உடைத்துப் பாதாள சாக்கடை வழியாக மிக நுணுக்கமாகத் தப்பிச் சென்றிருந்தனர்.

பல நாட்களாகத் திட்டம் தீட்டி நியூயோர்க் மேல் மாநிலத்தில் சுமார் 22 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இவர்களை நியூயோர்க் போலிசார் தேடி வந்தனர். டன்னெமோராவிலுள்ள அது பாதுகாப்பு சிறைச்சாலையை உடைத்துத் தப்பித்திருந்த இந்த இரு குற்றவாளிகளும் இணைந்தே மறைவிடங்களில் பதுங்கி இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களைப் போலிசார் வலை வீசித் தேடி வந்தனர். இதன் பயனாக வெள்ளிக்கிழமை இவ்விருவரில் ஒருவரான ரிச்சர்டு மேத் என்பவனை மலோனியில் துப்பாக்கி சகிதம் கண்டு பிடித்து அவனைச் சுற்றி வளைத்து சரணடையுமாறு பணித்தனர். ஆனால் அவன் தனது துப்பாக்கியைக் கீழே போட மறுத்ததால் போலிசார் அவனை சுட்டுக் கொன்றுள்ளனர்.

மேலும் ரிச்சர்டு ஸ்வீட்டைத் தேடும் பணியையும் போலிசார் முடுக்கி விட்டுள்ளனர். இது குறித்து குறித்த பிராந்திய ஷெரீஃப் கெவின் முல்வெர்ஹில் கருத்துத் தெரிவிக்கையில், 'தற்போது 3 வாரங்களாகத் தனிமையில் மறைந்திருக்கும் ரிச்சர்டு ஸ்வீட் மிகவும் களைப்படைந்து, மன உளைச்சலுக்கு உள்ளாகியும், பசியுடன் இருக்கவும் வாய்ப்புள்ளது. நிச்சயம் இதனால் அவன் தவறு செய்து போலிசாரிடம் பிடி படுவான் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer