Sunday, June 7, 2015

ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்திய அணி நாளை வங்கதேசம் செல்கிறது.

டெஸ்ட் போட்டி வருகிற 10ம் திகதி தொடங்குகிறது. அதே போல் ஒருநாள் போட்டிகள் 18ம் திகதி நடக்கிறது.

டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லியும், ஒருநாள் போட்டியில் டோனியும் தலைவராக பணியாற்றுவார்கள். நீண்ட இடைவேளைக்கு பிறகு டெஸ்ட் அணியில் ஹர்பஜன் சிங் ஆடுகிறார்.

வங்கதேச தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் கொல்கத்தாவில் நேற்று தீவிர பயிற்சி பெற்றனர். உடல் தகுதி சோதனையும் நடந்தது.

பயிற்சி ஆட்டம் எதிலும் விளையாடாமல் இந்திய அணி நேரடியாக வங்கதேசத்துடன் ஆடுகிறது.

இதற்கு முன்பு இரு அணிகள் இடையே நடைபெற்ற 4 டெஸ்ட் தொடரையும் இந்தியாவே கைப்பற்றி இருந்தது.

இந்திய அணி வீரர்கள் விவரம்:–

டெஸ்ட் போட்டி:-

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ஷிகர் தவான், முரளிவிஜய், புஜாரா, ரோஹித்சர்மா, ரஹானே, விருத்திமான் சகா ஹர்பஜன் சிங், அஸ்வின், கரண்சர்மா, இஷாந்த் சர்மா, உமேஷ்யாதவ், வருண் ஆரோன், புவனேஸ்வர் குமார்.

ஒருநாள் போட்டி:-

டோனி (அணித்தலைவர்), தவான், ரோஹித்சர்மா, விராட் கோஹ்லி, ரஹானே, ரெய்னா, ஸ்டூவர்ட் பின்னி, அம்பதிராயுடு, அஸ்வின், அக்சர் பட்டேல், உமேஷ்யாதவ், மொகித்சர்மா, குல்கர்னி, புவனேஸ்வர்குமார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer