Friday, June 12, 2015

பெண்களுக்கு தாம்பத்திய உறவை சுவாரஸ்யம் மிக்கதாக அறிமுகப்படுத்துவதில் முதல் முக்கிய பங்கு வகிக்கிறது முத்தம்....ஆனால் எல்லா ஆண்களும் பெண்களுக்கு பிடித்தமானதாக மிருதுவாக முத்தமிடுவதில் இருந்து தவறிவிடுகின்றனர்.

மேகம் கறுக்கும்போது முத்தமிடலாம்,
மேனி சிலிர்க்கும்போது முத்தமிடலாம்,
தென்றல் அடிக்கும்போது முத்தமிடலாம்,
சாரல் தெறிக்கும்போது முத்தமிடலாம்,
விண்மீன்கள் உதிரும்போது முத்தமிடலாம்
வெண்பனி சொட்டும்போது முத்தமிடலாம்
பூக்கள் மலரும்போது முத்தமிடலாம்
பகல் மெல்ல இருட்டும்போது முத்தமிடலாம்
பாதி இரவில் விழிக்கும்போது முத்தமிடலாம்
பொழுது விடியும்போது முத்தமிடலாம்
குயில்கள் கூவும்போது முத்தமிடலாம்
மரணத்திலும் முத்தமிட்டு
மரணத்தையும் வென்றுவிடலாம்.

முகம் சுளிக்காமல் பிரியமோடு இடும் முத்தத்திற்கு நிகர் வேறுதுங்க...?

இளம் மனைவியை எடுத்த எடுப்பிலேயே முரட்டுத்தனமாக அணைத்து, தங்கள் தேவைகளை ஆண்கள் நிறைவேற்ற முயலும்போது சில பெண்கள் பயந்து போகிறார்கள். அதனால் அவளைப் பொறுத்தவரை அந்த விஷயம் சுகமான ஒரு அனுபவிப்பாக இல்லாமல், டென்ஷனையும் பயத்தையும் ஏற்படுத்துவதாக மாறிப்போகிறது.

அதே இளம் மனைவியை கணவன் இதமாகப் பேசியபடியே மென்மையாக அவளை ஸ்பரிசித்து, மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட ஆரம்பித்து கன்னம், கழுத்து என்று ஒவ்வொரு இடமாக அவன் முன்னேறி வரும்போது அவளுக்குள் மனமெழுகு உருகத் தொடங்கிவிடும். அந்த விஷயத்தையே அப்புறம் அவள் ஆவலுடன் எதிர்கொள்ள ஆரம்பித்துவிடுகிறாள்.

முத்தம், உங்கள் தாம்பத்தியத்தை திருப்திகரமாகக் கொண்டு செல்வதற்கு மட்டும் பயன்படுவதில்லை... ஆச்சர்யப்படுத்தும் பல விஷயங்களையும் செய்கிறது.

முதலில் கணவன் மனைவிக்கான மன நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. ரொமான்டிக்காக தரப்படும் முத்தம், பிரியங்களை அதிகப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட ஆக்ஸிடோஸின் கெமிக்கலை நிறைய சுரக்கத் தூண்டுகிறது.

ஆசையுடனும் ஆர்வத்துடனும் முத்தமிடுபவர்கள் நீண்டநாள் வாழ்கிறார்கள் என்று பல ஆய்வுகளுக்குப் பின் கண்டு பிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பல்வேறு காரணங்களால் நம் தினசரி வாழ்க்கையில் ஏற்படும் கவலை, மன அழுத்தம், டென்ஷன் என்று பல பிரச்னைகள் தீர மெடிக்கல் ஸ்டோர் போகாமலே நீங்கள் வாங்க முடியும் ஒரே மருந்து முத்தம்தான்! அதனால் நோயற்ற ஹெல்தியான வாழ்க்கை வாழ முடிகிறது!

சோர்ந்த உடலுக்கும் மனசுக்கும் ஒரு மெகா பூஸ்ட் சாப்பிட்ட புத்துணர்ச்சி முத்தத்தால் கிடைக்கிறது. அதாவது இயல்பாக, ஒரு பெண்ணின் சராசரி இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 84 ஆகவும், ஆண்களுக்கு 72 ஆகவும் இருக்கிறது. முத்தமிடும் சமயத்தில் பெண்களின் துடிப்பில் 24_ம் ஆண்களின் துடிப்பில் 38_ம் அதிகரித்து, அதன் காரணமாக ரத்தம் வேகமாக பாய்ந்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறது. ரத்தம் சுத்தமாவதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது!

குறிப்பாக அடிக்கடி முத்தமிடுபவர்களின் முகம் இளமை குறையாமல் இருக்கிறது. ஒரு முறை முத்தம் தர சாதாரணமாக 12 முதல் 30 தசைகள் வரை இயங்க வேண்டியுள்ளது. அவற்றின் இயக்கம் முகத்தின் இளமையைக் காப்பாற்றித் தருகிறது. தவிர ஜப்பான் டாக்டர் டோமா என்பவர், தம்பதிகளின் வாயில் சுரக்கும் உமிழ்நீரை ஆராய்ந்துப் பார்த்துவிட்டு, முத்தமிடும்போது சுரக்கிற உமிழ்நீரில் ஏராளமான ஹார்மோன்கள் வெளிப்பட்டு அது மற்றவருடைய இரத்த ஓட்டத்தில் கலந்து, மனிதர்களுக்கு முதிர்ச்சி ஏற்படுவதைத் தடுக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்.

வேகமான இரத்த ஓட்டம் உடல் திசுக்களுக்கு அதிக ஆக்ஸிஜனை அளிப்பதால், திசுக்கள் இளமையாகவும் உற்சாகத்துடன் இருக்கின்றன என்கிறார் மற்றொரு இத்தாலி நாட்டு நிபுணர்.

அடிக்கடி முத்தமிடுங்கள். உங்கள் வாய் நாற்றமில்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.

வயதாக ஆக எச்சில் சுரப்பது குறைவதால்தான், பல்லிலும் வாயிலும் உற்பத்தியாகும் பாக்டீரியாக்கள் சுத்தப்படுத்தப்படாமல் அங்கேயே தங்கி வாயை நாற்றம் ஏற்படுத்துகின்றன. ஆனால் முத்தமிடும்போது அதிக அளவில் எச்சில் சுரப்பதால், பாக்டீரியாக்கள் அவ்வப்போது சுத்தப்படுத்தப்பட்டு வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.

முத்தத்தால் உடல்ரீதியில் ஒரு கிளர்வான மகிழ்ச்சியும் கிடைக்கிறது. நாம் ஏற்கெனவே பேசிய டோப்பாமைன், எண்டார்பின் போன்ற விஷயங்களை முத்தம் தூண்டுவதால் இந்த கிளர்வும், திருப்தியும் ஒரு த்ரில்லான மகிழ்வும் கிடைக்கிறது.

தியானம் செய்தது போன்ற பலனையும் முத்தம் கொடுக்கிறது. மன அமைதியும், புத்துணர்ச்சியும் தந்து அடுத்தடுத்து செய்யும் வேலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள வைக்கிறது. எனவே முத்தமிடுங்கள்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer