Monday, June 29, 2015

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் சந்திமால் புதிய சாதனை படைத்துள்ளார்.

இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்து வருகிறது.

இந்தப் போட்டியில் 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 329 ஓட்டங்கள் குவித்தது.

இதில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட தினேஷ் சந்திமால் ஐந்து பிடியெடுப்பு மற்றும் ஒரு ஸ்டம்பிங் மூலம் ஆறு பேரை ஆட்டமிழக்கச் செய்து சாதனைப் படைத்துள்ளார்.

அவர் அஹ்மத் ஷேசாத், யூனிஸ்கான், ஆசாத் ஷாபிக், சர்பிராஷ் அஹ்மது, ஜூனைத் கான் ஆகியோரை பிடியெடுத்தும், சதம் அடித்த அசார் அலியை ஸ்டம்பிங் செய்தும் ஆட்டமிழக்கச் செய்தார்.

இதற்கு முன் இந்திய விக்கெட் கீப்பர் கிர்மானி 1976ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்த சாதனையை படைத்தார். அதன்பின் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒரு விக்கெட் கீப்பர் இந்த சாதனையை செய்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer