Monday, June 29, 2015

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.

வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, ஒவ்வொரு நட்சத்திரங்களுக்குமான விரிவான குருமாற்றப் பலன்களை இங்கே தொடர்ந்து வாசித்துப் பயன் பெறலாம்.

உத்தரம்:

நட்சத்திரம்   - உத்திரம்    உத்திரம்
ராசி -   சிம்மம்    கன்னி
நட்சத்திராதிபதி -   சூரியன்    சூரியன்
ராசியாதிபதி -   சூர்யன்    புதன்
அதிதேவதை -   அர்யமா    அர்யமா
கணம்  -  மனுஷம்    மனுஷம்
ரஜ்ஜூ -   வயிறு    வயிறு
நாடி  -  பார்சுவ    பார்சுவ
வேதை   -பூரட்டாதி    பூரட்டாதி
விருட்சம்   - அலரி    அலரி
யோனி -   எருது    எருது
பக்ஷி  -  கிளுவை    கிளுவை
எழுத்துக்கள்  -  டே-டோ-ப-பி    டே-டோ-ப-பி

பொருளாதாரத்தில் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தமப்திகளிடையே அன்பு மேலோங்கும். மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கலாம்.தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள். வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.

உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள் உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலர் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர்.

வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் ¬¬தொழில் தொடங்க சரியான தருணமிது.

கலைஞர்கள் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும்.

மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்படையும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை மறையும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும்.

பரிகாரம்: இராம நாம  ஜெபம் மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer