Monday, June 29, 2015

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.

வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, ஒவ்வொரு நட்சத்திரங்களுக்குமான விரிவான குருமாற்றப் பலன்களை இங்கே தொடர்ந்து வாசித்துப் பயன் பெறலாம்.

ஆயில்யம்:

நட்சத்திரம்  -  ஆயில்யம்
ராசி  -  கடகம்
நட்சத்திராதிபதி  -  புதன்
ராசியாதிபதி -   சந்திரன்
அதிதேவதை  -  ஸர்ப்பங்கள்
கணம்  -  ராக்ஷஸம்
ரஜ்ஜூ  -  பாதம்
நாடி  -  ஸமான
வேதை -   மூலம்
விருட்சம்   - புன்னை
யோனி  -  ஆண் பூனை
பக்ஷி  -  கிச்சிலி
எழுத்துக்கள்   - டி-டு-டே-டோ

அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எனினும் வீண்கலகமும் அலைச்சலும் இருக்கும், இருப்பினும் குருவின் பார்வையால் காரிய அனுகூலமும் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர்.  தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் சேருவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.

உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும்.

தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவு நீங்கும். அதே நேரம் நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலகட்டமிது. பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழில் அதிக வருவாய் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்துதான் கோரிக்கைகள் நிறைவேறும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். பாராட்டுகளும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை.

மாணவகண்மணிகளுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
உடல்நலனைப் பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம். கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் சொல்ல சொல்ல  சொல்லொன்னாத் துயரமும் அகன்று விடும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer