Monday, June 29, 2015

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.

வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, ஒவ்வொரு நட்சத்திரங்களுக்குமான விரிவான குருமாற்றப் பலன்களை இங்கே தொடர்ந்து வாசித்துப் பயன் பெறலாம்.

பூரம்:

நட்சத்திரம்   - பூரம்
ராசி   - சிம்மம்
நட்சத்திராதிபதி  -  சுக்ரன்
ராசியாதிபதி  - சூர்யன்
அதிதேவதை   - பகன்
கணம்  - மனுஷம்
ரஜ்ஜூ  -  தொடை
நாடி -   மத்ய
வேதை  -  உத்தரட்டாதி
விருட்சம்  -  பலாசு
யோனி -   பெண் எலி
பக்ஷி -   பெண் கழுகு
எழுத்துக்கள்  -  மோ-ட-டி-டு

பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். ஆனால் உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடு வரலாம். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருங்கள். மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை காணலாம். அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். சந்தாண பாக்கியம் கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது. புதிய வீடு மனை வங்க தடைகள் ஏற்படலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைபளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள்.

வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பிற்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. மூதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்குள் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும்.

கலைத்துறையினருக்கு மிகப் பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்த்த புகழ் ,பாராட்டு கிடைக்கும்.

மாணவமணிகள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெருவெற்றி பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

உடல் நலம் சிறப்படையும். பித்தம் மயக்கம் போன்ற உபாதைகள் நீங்கும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு தேவை. நெருப்பு தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை.

பரிகாரம்: சிவபுராணம் மற்றும் கோளறு பதிகம் படிப்பதனால்நா நன்மை  தேடி வரும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer