Sunday, May 31, 2015

மலேசியா நாட்டில் பெற்ற மகனை கொன்று சமையல் அறையில் புதைத்ததாக சந்தேகிக்கப்படும் பெற்றோர்களை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எட்டுமாதங்களுக்கு முன்னர் Kepong நகரில் உள்ள Taman Usaha Jaya என்ற பகுதியில் 33 வயதான நபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் குடியேறியுள்ளார்.

மனைவி, இரண்டும் மகள்கள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்த அந்த நபர், தனது குடும்பத்தாருடன் அடிக்கடி தகறாரில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் தனது வீட்டின் சமையல் அறையை சீரமைக்கும் வேண்டும் என்றும் நிலத்தை துளையிட அனுமதி வேண்டும் என வீட்டு உரிமையாளரிடம் அந்த நபர் கேட்டுள்ளார்.

வீட்டு உரிமையாளர் அனுமதி அளித்ததும், சில தினங்களுக்கு பிறகு உரிமையாளரிடம் தகவல் அளிக்காமலே வீட்டை காலி செய்துவிட்டு அந்த குடும்பம் சென்றுள்ளது.

பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை யாரும் இல்லாத அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வெளியாவதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கும் வீட்டு உரிமையாளருக்கு தகவல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து, அங்கு வந்த பொலிசார், சமையல் அறையில் புதிதாக சிமெண்ட் பூசப்பட்டுள்ளதை கண்டு அந்த இடத்தை தோண்ட உத்தரவிட்டனர்.

அப்போது, உள்ளே அழுகிய நிலையில் மனித எழும்புக்கூடுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டு உரிமையாளரிடம் விசாரித்தபோது அவர், தனது வீட்டில் குடியிருந்தவரை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அந்த குடும்பத்தை கண்டுபிடிக்க தனிப்படையை அமைத்த பொலிசார், Sabah நகரில் உள்ள Keningau என்ற பகுதியில் கணவரை சனிக்கிழமை அன்றும், Penampang நகரில் மகள்களுடன் தங்கியிருந்த மனைவியை இன்றும் பொலிசார் கைது செய்தனர்.

பொலிஸ் அதிகாரியான Ali Ahmad பெற்றோர்களிடம் இளைய மகன் குறித்து விசாரிக்கையில், அவன் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாக கூறியுள்ளனர்.

சந்தேகத்தின் பெற்றோர்களை கைது செய்த பொலிசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், எழும்பு கூடுகளை பிரேத பரிசோதனை செய்ததில் அது அந்த பெற்றோர்களின் மகன்(8) தான் என தெரியவந்துள்ளது.

ஆனால், இந்த கொலையை யார் செய்தார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்காததால், சந்தேகத்திற்குரிய பெற்றோர்களிடம் பொலிசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer