Sunday, May 31, 2015

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சந்தர்பாலின் வேண்டுகோளை நிராகரித்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அவரை அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரரான சந்தர்பாலை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கவில்லை.

இதைத் தொடர்ந்து லாரா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

சந்தர்பாலும் என்னை ஓய்வு பெறுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், தன்னை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சேர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியில் சந்தர்பால் பெயர் இடம்பெறவில்லை. அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக 2 புதுமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer