Saturday, May 30, 2015

அமெரிக்கா நாட்டிற்கு சொந்தமான விமானம் ஒன்றின் என்ஜினிற்குள் நின்று விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட பணிப்பெண்ணை பணியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சிகாகோ (Chicago) விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக விமானம் ஒன்று தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

சிறிது நேரத்திற்கு பிறகு, பயணிகள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏற தொடங்கியுள்ளனர்.

அப்போது, விமான பணிப்பெண்களில் ஒருவரான Ericka Paige Diehl (41) என்பவர், விமானத்தின் எஞ்ஜினிற்கு திடீரென ஏறி நின்று விதவிதமாக ‘போஸ்’ கொடுக்க தொடங்கியுள்ளார்.

என்ஜினிற்குள் எரிக்கா நிற்பதும், அவரை தோழி ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதையும் பார்த்த பயணி ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.

சிறிது நேரத்திற்கு பின்னர், அந்த பணிப்பெண் புகைப்படம் எடுத்ததற்கு பிறகு விமானத்தில் ஏறியதுடன் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.

அப்போது, இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பயணி, எரிக்கா விமானத்தில் ஏறியவுடன் அவருடைய பெயரை தெரிந்துக்கொண்டார்.

அது மட்டுமல்லாமல், புகைப்படங்களை எடுத்த எரிக்கா அதனை தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றம் செய்ததையும் அந்த பயணி கண்டுள்ளார்.

விமான பணிப்பெண்ணின் செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிர்வாகத்திடம் பயணிகள் முறையிட்டதை தொடர்ந்து எரிக்கா தன்னுடைய புகைப்படங்களை பேஸ்புக்கிலிருந்து நீக்கியுள்ளார்.

இது குறித்து பேசிய மற்றொரு விமான பணிப்பெண், இது காலம் காலமாக நடைபெறும் வழக்கம் தான் என்றும் இதில் தவறேதும் இல்லை என கருத்து தெரிவித்துள்ளார்.

சிகாகோ வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், விமான பணிப்பெண்ணின் செயலால் எந்த தீங்கும் நடந்திரவில்லை என்பதால், அவர் மீது நடவடிக்கை எதுவும் தேவையில்லை என கூறியுள்ளார்.

எரிக்காவின் நடவடிக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத விமான நிறுவனம் அவருடைய செயல்பாடு குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer