Sunday, May 31, 2015

யெஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி ரானா கபூரின் மகளான ராக்கி கபூர் தாண்டன் டுவிட்டரில் இணைந்துள்ளார்.

இவரை இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் இர்பான் பதான் வரவேற்றுள்ளார். மேலும், ரோஹித் சர்மா, கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, டோனி, ஷேவாக், யுவராஜ் மற்றும் பல நட்சத்திர வீரர்கள் பின் தொடர்கின்றனர்.

இவர் அமெரிக்காவின் பென்வில்வேனியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற வார்ட்டன் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர். இந்தியாவின் அதிக சக்தி வாய்ந்த 25 பெண் தொழிலதிபர்களுள் ஒருவராக இவரை இந்திய டுடே தெரிவு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியின் போதும் அதிக சிக்ஸ் அடித்த வீரருக்கு தலா ஒரு லட்ச ருபாய் பரிசுத் தொகையாக யெஸ் வங்கி ஸ்பான்ஷ்ர் செய்தது. பெரும்பாலான போட்டிகளை காண வந்த இவர், வீரர்களுக்கு பரிசுத் தொகையை வழங்கினார்.

ஐபிஎல் போட்டிகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த ராக்கி கபூர், விரைவில் இந்திய விளையாட்டுத் துறைக்கு பல வழிகளில் உதவி புரியவும் முடிவு செய்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer