Friday, May 29, 2015

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற ஜூன் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 3-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுவார் என்று அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கடந்த 11 ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து தமிழக முதல் அமைச்சராக ஜெயலலிதா  கடந்த 23 ஆம் தேதி பதவியேற்றார். ஜெயலலிதா எம்.எல்.ஏ பதவியை இழந்துள்ளதால், முதல் அமைச்சராக பதவி ஏற்ற ஆறு மாதத்துக்குள் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும் என்பது விதி. அதன் படி இந்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், ஜெயலலிதா போட்டியிடுவார் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer