Friday, May 22, 2015

ஜோதிகாவின் ரீ என்ட்ரிக்கு பெரிய வரவேற்பில்லை ஜனங்கள் மத்தியில். இதனால் அவருக்கு அதிர்ச்சி என்றாலும் அவரை பல காலமாக நடிக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த மாமனாருக்கு மகிழ்ச்சியாம். இனி குடும்ப பொறுப்பை மட்டும் பாரும்மா. எதுக்கு சினிமாவெல்லாம் என்று பேச ஆரம்பித்திருக்கிறாராம். குடும்பமே சேர்ந்து இந்த கருத்துக்கு ‘ஆமென்’ சொல்லிவிட்டதால், அவரது நடிப்புக்கு தற்காலிக இடைவெளி தரப்படும் போல தெரிகிறது.

இதற்கிடையில் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்த அத்தனை பேருக்குட் ட்விட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார் ஜோதிகா. அதுதான் இப்போது பெரிய சர்ச்சை ஆகியிருக்கிறது. எப்படி? 36 வயதினிலே படத்தில் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடும் குடும்ப தலைவியாக அவர் நடித்திருக்கிறார் அல்லவா? ஆனால் நிஜத்தில் வேறு மாதிரி இருக்கிறது அவரது செய்கை. இந்த ட்விட் அவரது சொந்த பக்கத்திலிருந்து செய்யப்பட்டதல்ல, கணவர் சூர்யாவின் ட்விட்டர் அக்கவுன்ட்டிலிருந்துதான் இந்த நன்றியை கூறியிருக்கிறார். தனக்கென்று சொந்தமாக ஒரு ட்விட்டர் அக்கவுன்ட் கூட வைத்துக் கொள்ள முடியாமலிருக்கிறார் அவர் என்பது வெளிப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் அவரும் சராசரி குடும்ப தலைவிதானோ? என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது. இது நல்லதா? கெட்டதா?

0 comments :

Post a Comment

 
Toggle Footer