இவ் வழக்கில் நாளைய தினம் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்பது சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
நாளை ஊர்காவல்துறை நீதிமன்றில் நடைபெறவுள்ள விசராணையில் வித்தியாவின் குடும்பம் சார்பாக பிரபல சிரேஸ்ட மனித உரிமைகள் சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகவுள்ளனர்.
வித்தியாவின் கொலை வழக்கு விசாரணையானது சர்வதேச ரீதியில் பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதில் மிக முக்கியமாக கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுமா என்கின்ற பலரது எதிர்பார்ப்புக் குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம் என நம்பப்படுகின்றது.
குறிப்பாக பல்வேறு மனித உரிமை வழக்குகளில் ஆஜராகி மனித உரிமைகளை காப்பாற்றி வரும் பிரபல சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் வித்தியாவின் கொலை வழக்கினை பொறுப்பேற்றுள்ளதானது குற்றவாளிகளுக்குரிய அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க கூடும் என்ற நம்பிக்கையினை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment