Friday, May 29, 2015

திறந்திடு சீஸே என்றொரு படம். இதில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் தன்ஷிகா. பேராண்மை, அரவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர் சுத்த தமிழ் பெண்.

தஞ்சாவூர்காரர். இப்போது சீஸே படத்தில் நடித்த பின்பு ஆளே பீஸ் போன வருத்தத்திலிருக்கிறார். ஏன்?  படத்தில் வரும் வசனங்கள்தான். ‘நீ ஒரு அட்டு மூஞ்சி, உன்னை பார்த்தால் மூடே வராதே’ என்றும், ‘இவளையே ஒருத்தனுக்கு பிடிச்சுருக்குன்னா அவனுக்கு கண்ணுல கோளாறுன்னு அர்த்தம்’ என்றும் வசனம் பேசி வைத்திருக்கிறார்கள்.

‘ஷுட்டிங் ஸ்பாட்ல இதையெல்லாம் பேசாமல் பின்னாளில் டப்பிங்கில் வைத்து இப்படி அசிங்கப்படுத்தியிருக்காங்க’ என்கிறாராம் தன்ஷிகா. இந்த ஒரு காரணத்துக்காகவே இந்த படத்தின் பிரமோஷன்களுக்கு நான் வர மாட்டேன் என்று அவர் போர்க்கொடி பிடித்திருப்பதால், படக்குழு வருத்தத்தில்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer